தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தடையின்றி குடிநீர் வழங்க அமைச்சர் அறிவுரை

தடையின்றி குடிநீர் வழங்க அமைச்சர் அறிவுரை

தடையின்றி குடிநீர் வழங்க அமைச்சர் அறிவுரை


ADDED : மே 31, 2026 02:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 02:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறித்துறை அமைச்சர் விஜய் பாலாஜி முன்னிலையில், மாவட்ட ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி வரவேற்றார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:

வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் மீன் குத்தகை எடுத்து பிடிப்பதில் உள்ள சிரமத்தை வனத்துறை, மீன்வளத்துறை இணைந்து தீர்க்க வேண்டும். மஞ்சள் ஆராய்ச்சி மையம் கட்டி முடித்தும், சில இயந்திரங்கள் வாங்கவில்லை என காரணம் கூறக்கூடாது.

அத்துறையில் உள்ள நிதியில், உடன் இயந்திரங்கள், கருவிகளை வாங்கி செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள். இவ்வாறு பேசினார்.

கைத்தறி, துணி நுால் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பேசியதாவது: மாநகராட்சிக்கான ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்தில் பல பகுதிக்கு முறையாக தண்ணீர் செல்லவில்லை. புதிய குழாய் பதித்தும், பழைய குழாய் மூலமே தண்ணீர் செல்கிறது.

அதனை சீரமைத்து, தடையற்றதாகவும், அனைத்து பகுதிக்கும் குடிநீர் தர வேண்டும்.

சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, ஒதுக்கப்பட்ட அனைத்து பஸ்களும் இயக்க வேண்டும். மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படும் தனியார் பஸ்கள், சோலார் பஸ் ஸ்டாண்ட் செல்ல இயலாது என்ற பிரச்னையில் தீர்வு காண வேண்டும். ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் உட்பட அனைத்து கூட்டு குடிநீர் திட்டத்திலும் தடையின்றி குடிநீரை வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

ஆட்சி மாறினாலும் காட்சி மாறல

முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் பங்கேற்கும் ஆய்வு கூட்டங்களில் அக்கட்சியினரின் ஆதிக்கம் இருக்கும். அதிகாரிகளுக்கே இடம் இருக்காது. இந்த காட்சியை காண முடிந்தது. கோபி சப்-கலெக்டருக்கான இருக்கையில், தவெகவில் சமீபத்தில் சேர்ந்த அதிமுக நிர்வாகி அமர்ந்திருந்தார்.இதனால் சப்-கலெக்டருக்கு மாற்று இருக்கை வழங்கப்பட்டது.

அனைத்து குளங்களுக்கும் தண்ணீர்

கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில், 70க்கும் மேற்பட்ட குளங்கள், நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்வில்லை என தெரிவித்தனர். அத்திட்ட குழாய்களை சேதப்படுத்தி, குழாய்க்குள் குப்பைகளை போட்டு சிரமங்களை சிலர் தந்துள்ளனர். அவற்றை சீரமைத்து, அனைத்து குளத்துக்கும் விடுதல் இன்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளோம். பவானிசாகர் அணை உட்பட தேவையான இடங்களில் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுக்க எளிய நடைமுறையை செயல்படுத்துகிறோம். இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us