ADDED : நவ 29, 2024 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'
அரசு பள்ளியில்
அமைச்சர் ஆய்வு
பவானி, நவ. 29-
அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், நுழைவாயில் முதல் வகுப்பறைக்கு செல்லும் வரை, பேவர் பிளாக் கற்கள் பதித்து கொடுக்குமாறு, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், அமைச்சருமான முத்துச்சாமியிடம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தனது சொந்த செலவில், பேவர் பிளாக் கற்கள் பதித்து கொடுப்பதாக தெரிவித்தார். தற்போது ஆறு லட்சம் ரூபாய் செலவில் நடந்து வரும் பணியை, அமைச்சர் முத்துசாமி நேற்று பார்வையிட்டார்.

