தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அறிவுசார் மையத்தில் அமைச்சர் ஆய்வு

அறிவுசார் மையத்தில் அமைச்சர் ஆய்வு

அறிவுசார் மையத்தில் அமைச்சர் ஆய்வு


ADDED : ஜூலை 31, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார், ஈரோட்டில் காந்திஜி சாலையில் உள்ள, முன்னாள் படைவீரர்கள் மாளிகை, அறிவுசார் மையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

முன்னாள் படைவீரர்கள் மாளிகை அலுவலகம், ஓய்வு அறைகளை பார்வையிட்டு, அந்த அறைகளை குளிரூட்டப்பட்ட அறைகளாக மாற்ற, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை அமைச்சர் வழங்கினார்.பின், கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள இளைஞர் மேம்பாட்டு மையம், நுாலகம், அறிவுசார் மையத்தை ஆய்வு செய்தார். அங்கு பயிலும் மாணவர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்த அமைச்சர், அவற்றை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

* பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு துறைகளில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் சரத்குமார் இங்கு நேற்று வருகை புரிந்தார்.

பயிற்சி நிலையத்தில் உள்ள வகுப்பறை, கலையரங்கம், விளையாட்டு அரங்கம், உணவுக்கூடம், நூலகம் மற்றும் சமையலறையை பார்வையிட்டு, வகுப்பறைகளில் பயிற்சியில் இருந்த அரசு அலுவலருடன் கலந்துரையாடினார். அலுவலர்களுக்கான பயிற்சியில் ஏ.ஐ., தொழில் நுட்பம் தேவைப்பட்டால் அதற்கான வசதிகள் செய்து தரப்படும் என அமைச்சர் உறுதி அளித்தார். ஆய்வின் போது அண்ணா நிர்வாக கல்லுாரி இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., அரசு அலுவலர் பயிற்சி நிலைய முதல்வர் சிவசுப்ரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us