/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
40 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்
/
40 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர்
ADDED : ஜன 04, 2025 01:35 AM
சென்னிமலை, ஜன. 4-
சென்னிமலை பேரூராட்சி பகுதியில், 51.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறைவடைந்த ஏழு திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வும் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தொடங்கி வைத்தார். முன்னதாக, 40 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் செல்வம், பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், நகர செயலாளர் ராமசாமி, வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
* சென்னிமலை அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில், தொழில் வரி மற்றும் தொழில் உரிமை கட்டணத்தை மறு ஆலோசனை செய்ய வலியுறுத்தி, வணிக சங்க நிர்வாகிகள் தலைவர் ரமேஷ் தலைமையில், அமைச்சர் சாமிநாதனிடம் மனு கொடுத்தனர்.

