/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உள்ளாட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுமக்களுக்கு உறுதியளித்த அமைச்சர் முத்துசாமி

ADDED : பிப் 18, 2025 01:21 AM
உள்ளாட்சி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுமக்களுக்கு உறுதியளித்த அமைச்சர் முத்துசாமி
ஈரோடு:ஈரோடு மாநகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம் பாளையம் பஞ்.,களையும் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் மனு வழங்கினர்.
பின், அவர்கள் கூறியதாவது:மாநகராட்சியுடன் கதிரம்பட்டி, மேட்டுநாசுவம்பாளையம் பஞ்சாயத்துக்களையும், அதற்கு உட்பட்ட பச்சைபாளி, அருந்ததியர் எல்லப்பாளையம், மணக்காட்டூர், காளிங்கராயன்பாளையம் போன்ற பல கிராமங்களையும் இணைப்பதால், கூடுதலாக வரிகள் செலுத்த வேண்டி வரும். நுாறு நாள் வேலை திட்டப்பணிகள் முற்றிலும் நிறுத்தப்படும். மேட்டு நாசுவம்பாளையம் பஞ்.,ல் மட்டும், 1,250 குடும்பங்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். விவசாய கூலி தொழிலாளியாகவும், பல்வேறு தொழில் செய்வோராகவும் உள்ளனர். இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே இவை பஞ்சாயத்துக்களாகவே தொடர வேண்டும். இவ்வாறு கூறினர்.
* கவுந்தப்பாடி பஞ்சாயத்து நகராட்சியாக தரம் உயர்கிறது. இந்த நகராட்சியுடன் சலங்கப்பாளையம் என்ற டவுன் பஞ்சாயத்தை இணைக்க உள்ளனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மனு வழங்கினர்.
இதுபோன்ற கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் இருப்பது பற்றி, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு தகவல் தெரிவித்தனர். பெருந்துறையில் இருந்து வந்த அமைச்சர், மக்களை சந்தித்து கூறியதாவது: உள்ளாட்சி அமைப்புகளை பிற
அமைப்புகளுடன் இணைக்க பல இடங்களில் எதிர்ப்பு வந்துள்ளது. இதுபற்றி முதல்வரிடம் பேசுகிறோம். என்னிடமும் பலரும் மனு வழங்கியுள்ளனர். இதில் உள்ள சிக்கல்
குறித்து நானே விபரத்தை மனுவாக தயார் செய்து கொண்டு வந்துள்ளேன். இதுபற்றி கலெக்டரிடம் வழங்கி, பிரச்னையை
விளக்கவுள்ளேன். இவ்வாறு அமைச்சர் கூறினார். இதை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.