/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 இடங்களில் கான்கிரீட் சாலைப்பணி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு
/
5 இடங்களில் கான்கிரீட் சாலைப்பணி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு
5 இடங்களில் கான்கிரீட் சாலைப்பணி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு
5 இடங்களில் கான்கிரீட் சாலைப்பணி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைப்பு
ADDED : ஜூலை 11, 2025 12:57 AM
ஈரோடு, தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, 19வது வார்டு சின்ன செங்கோடம்பாளையம் முதல் பெருந்துறை ரோடு பள்ளி நுழைவுவாயில் வரை, 44 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, அமைச்சர் முத்துசாமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார்.
இதேபோல, 48வது வார்டு அன்னை நகரில், 1.47 கோடி ரூபாய் மதிப்பில், 32வது வார்டு கோவலன் வீதியில், 41.50 லட்சம் ரூபாய் மதிப்பில், சிறப்பு நிதி திட்டத்தில், 10வது வார்டு செங்கோடம்பாளையத்தில், 78 லட்சம் ரூபாய் மதிப்பில், 33வது வார்டு கிழக்கு அம்பேத்கர் வீதியில், 79 லட்சம் ரூபாய் மதிப்பு என, 3.89 கோடி ரூபாய் மதிப்பில், கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது மக்களிடம் குறைகளும் கேட்டறிந்தார்.
நிகழ்வில் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில், பல்வேறு திட்டத்தில், 35.85 கோடி ரூபாய் மதிப்பில், 88.80 கி.மீ., நீளத்துக்கு, 897 சாலை பணிகளுக்கு உத்தரவு வழங்கி பணி தொடங்கப்படவுள்ளது. இதில்லாமல், 10.06 கோடி ரூபாய் மதிப்பில், 120 சாலைப்பணி, 7.49 கோடி ரூபாய் மதிப்பில், 54 மழைநீர் வடிகால் பணிகளுக்கு ஒப்பந்த புள்ளி பெறப்பட்டுள்ளது. இந்த பணிகளும் விரைவில் துவங்கும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
நிகழ்வில் கலெக்டர் கந்தசாமி, எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம், ஆணையர் அர்பித் ஜெயின், துணை மேயர் செல்வராஜ், துணை ஆணையர் தனலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.