தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலவச பொங்கல் தொகுப்பு வழங்கல் தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கல் தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி

இலவச பொங்கல் தொகுப்பு வழங்கல் தொடங்கி வைத்த அமைச்சர் முத்துசாமி


ADDED : ஜன 09, 2026 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2026 05:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு, மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதி ரேஷன் கடையில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.

பொங்கல் தொகுப்பு, 3,000 ரூபாய் ரொக்கப்பணத்தை வழங்கிய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் ஏழு லட்சத்து, 46,528 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டி-கைக்கு முன்பாக திட்டப்பணிகளை பயனாளிகளிடம் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அடுத்த நான்கு நாட்க-ளுக்கும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்காக வாங்-கிய கரும்பு, 15 ரூபாய் விலையில் வாங்கியதாகவும், 50 ரூபாயா-வது கொடுக்க சிலர் கூறுகின்றனர். அதுவும் கவனிக்கப்பட வேண்டியதுதான். இவ்வாறு கூறினார்.நிகழ்வில் கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், டி.ஆர்.ஓ., சாந்த-குமார், ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி-வாளர் கந்தராஜா, மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

* அந்தியூர், தவிட்டுப்பாளையம் ரேஷன் கடைகளில், எம்.எல்.ஏ., வெங்கடாசலம், அரசின் இலவச பொங்கல் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கினார். அந்தியூர் வட்டா-ரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் காலையில், 100 டோக்கன், மாலையில், 100 டோக்கன்களுக்கும் பொங்கல் பரிசு முதல் கட்டமாக வழங்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us