/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல' அமைச்சர் முத்துசாமி விளக்கம்
/
'கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல' அமைச்சர் முத்துசாமி விளக்கம்
'கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல' அமைச்சர் முத்துசாமி விளக்கம்
'கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல' அமைச்சர் முத்துசாமி விளக்கம்
ADDED : பிப் 09, 2025 07:07 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின், வீட்டு வச-தித்துறை அமைச்சர் முத்துசாமி, ஓட்டு எண்ணிக்கை நடந்த, சித்-தோடு அரசு பொறியியல் கல்லுாரி முன் நிருபர் களிடம் கூறியதா-வது:தமிழகத்தில், 2021ம் ஆண்டுக்கு பின் நடந்த அனைத்து தேர்தல்க-ளிலும், மக்கள் தி.மு.க.,வுக்கு துணை நிற்கின்றனர்.
முதல்வரின் நலத்திட்டங்களால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்-றியும் பெற்றுள்ளோம். இத்தேர்தலை அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள் புறக்கணித்திருக்க கூடாது. அவர்கள் போட்டி-யிட்டிருந்தாலும், கடந்த முறை என்ன ஓட்டுக்களை பெற்றார்-களோ, அதையேதான் வாங்கி இருப்பார்கள்.
அவர்கள் போட்டியிடாததால், எதிர்கட்சி ஓட்டுகளில் பெரும்-பாலும், தி.மு.க., அரசின் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க., பக்கம் திரும்பி உள்ளது. சில ஓட்டுகள், நாம் தமிழர் கட்சிக்கு சென்றுள்ளன.அதே நேரம், அ.தி.மு.க., - பா.ஜ., போன்ற கட்சிகள், தேர்தலில் போட்டியிடாததால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு அதிகரித்துள்-ளது. ஈ.வெ.ரா., குறித்து சீமான் கூறிய கருத்து காரணமாக அக்கட்-சிக்கு ஓட்டு அதிகரிக்கவில்லை.
ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க., போலி வெற்றி பெற்றிருப்ப-தாக, அ.தி.மு.க.,வினர் கூறுவது தவறு. இன்றைய கால கட்டத்தில் கள்ள ஓட்டு போடுவது அவ்வளவு எளிதல்ல. நியாயமான முறையில் இத்தேர்தலை தி.மு.க., அணுகியது. தேர்தலும் நியாய-மாக நடந்தது. இவ்வாறு கூறினார்.
'டெல்லி தேர்தல் முடிவுகள், இண்டி கூட்டணிக்கு விழுந்த சம்-மட்டி அடி' என இ.பி.எஸ்., கூறியது பற்றி நிருபர்கள் கேட்டதும், ''ஒரு மாநிலத்தில் நடந்த தேர்தல், ஒட்டு மொத்த கூட்டணிக்கும் விழுந்த அடி என்றால், ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது அ.தி.மு.க.,வுக்கு விழுந்த அடியா?. இண்டி கூட்டணியை எந்த காலத்திலும் வீழ்ந்த முடியாது,'' என்றார்.வெற்றி சான்றிதழை பெற்ற பின், தி.மு.க., வேட்பாளர் சந்திர-குமார் கூறியதாவது:நான் கடந்த, 2011-2016ல் எம்.எல்.ஏ., பதவியில் இருந்தபோது, சூரம்பட்டி நால் ரோடு அருகே உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தை பயன்படுத்தி வந்தேன். அதன்பின் கடந்த, 10 ஆண்டு களாக அந்த அலுவலகம் பயன் படுத்தப்படாமல் உள்ளது. அந்த அலுவ-லகத்தை பயன்படுத்த வாய்ப்பு இருந்தால், மக்கள் குறை கேட்க எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்படும். அதற்கு வாய்ப்பில்லை என்றால், ஒரு மாதத்துக்குள் புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் அமைக்கப்படும். இவ்வாறு கூறினார்.

