/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிலம்ப பயிற்சி நிறைவு சான்று வழங்கிய அமைச்சர்
/
சிலம்ப பயிற்சி நிறைவு சான்று வழங்கிய அமைச்சர்
ADDED : மே 20, 2025 02:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில், வெள்ளகோவிலில் நகர தி.மு.க., கலைத்தாய் சிலம்பம் பயிற்சி பள்ளி இணைந்து, ௧௫ நாட்கள் சிலம்ப பயிற்சியை நடத்தியது. நிறைவு நாளையொட்டி பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது. விழாவுக்கு நகர தி.மு.க., செயலாளர் முருகானந்தன் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன்,
எஸ்.என்.எல்.யூ., அறக்கட்டளை தலைவர் ஆதவன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட தி.மு.க., செயலாளர் முத்துகுமார், ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.