தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.57 கோடி மதிப்பில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்-சர்கள்

ரூ.57 கோடி மதிப்பில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்-சர்கள்

ரூ.57 கோடி மதிப்பில் திட்டப்பணி: தொடங்கி வைத்த அமைச்-சர்கள்


ADDED : மார் 03, 2026 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 04:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: வெள்ளகோவிலில், 57.27 கோடி ரூபாய் மதிப்பில், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

முத்துார் பேரூராட்சி ரங்கபையன்காட்டில், 51.84 கோடி மதிப்-பீட்டில், மூன்று நகராட்சி, ஆறு பேரூராட்சி மற்றும் 86 ஊராட்சி-களை உள்ளடக்கிய, 1,790 குடியிருப்புகளுக்கான முத்துார் - காங்-கேயம் கூட்டு குடிநீர் திட்டத்தில், 34.63 கி.மீ., துாரத்துக்கு சேத-மான குழாய்களை மாற்றுதல், உயர்மட்ட பாலம், நீரடைப்பான், வால்வு, மின் கடத்தும் கம்பிகள் அதற்குண்டான பாகங்களை மறு சீரமைப்பு செய்தல். 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், முதலாவது வார்டு செங்கோடம்பாளை-யத்தில், 30,000 லிட்டர் மேல்நிலைத்தொட்டி அமைத்து குடிநீர் குழாய் விஸ்தரிப்பு. 19 லட்சம் ரூபாய் மதிப்பில் முத்துார் பேரூ-ராட்சி அலுவலக வளாகத்தில், 60,000 லிட்டர் கொள்ளளவு மேல்-நிலைத் தொட்டி அமைக்கும் பணி என, 52.21 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி நேற்று தொடங்கி வைத்தனர்.இதேபோல் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கல்வி நிதி, 15-வது நிதிக்குழு மானியம், அமைச்சரின் சொந்த நிதி, மாவட்ட கனிமவள நிதி, நபார்டு திட்டத்தில், 5.06 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்-டப்பணிகளை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வுகளில் திருப்பூர் கலெக்டர் மனிஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வராணி, திட்ட இயக்குநர் சங்க-மித்திரை, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர், நக-ராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us