ADDED : டிச 29, 2024 12:56 AM
ஈரோடு, டிச. 29-
சுதந்திர போராட்ட வீரர் பொல்லானின், 256வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், பிரகாஷ் ஆகியோர், அறச்சலுாரை அடுத்த ஜெயராமபுரத்தில், பொல்லான் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின் நிருபர்களிடம் அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: இங்கு ஒரு ஏக்கரில், ரூ.4.90 கோடி மதிப்பில் பொல்லான் சிலையுடன் கூடிய நினைவு அரங்கம் அமைக்க நிதி ஒதுக்கி, அடிக்கல் நாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு பொல்லான் பிறந்த தினத்தை நினைவரங்கில் கொண்டாட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்படும்.
ஈரோட்டில் முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில், மேடையில் பெண் மேயரை அமர செய்யாதது குறித்து, மாநகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர் குற்றஞ்சாட்டிய கேள்விக்கு, நாக ரத்தினத்தை மேயராக அமர வைத்ததே முதல்வர்தான். மேயரை பிடிக்காத தி.மு.க., கவுன்சிலர்கள்தான் அவ்வாறு குற்றஞ்சாட்டி இருப்பார்கள். முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் மறைவு காரணமாக, பொல்லான் பிறந்த தின விழா அமைதியாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
