ADDED : மே 17, 2026 05:19 AM
ராசிபுரம் :ராசிபுரம் தொகுதியில், த.வெ.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லோகேஷ் தமிழ்செல்வன். இவர், அ.தி.மு.க., முன்னாள் சபாநாயகர் தனபால் மகன். தேர்தலில் வெற்றி பெற்றபின், லோகேஷ் தமிழ்ச்செல்வன், நேற்று முதன் முறையாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ''தேர்தல் பிரசாரத்தின் போது தொகுதி முழுவதும் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். மக்களின் குறைகளை தீர்க்க மைக்ரோ லெவலில் திட்டமிட்டு, ஒவ்வொரு கிராமமாக நேரில் சென்று நடவடிக்கை எடுப்பேன்.
ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் பிரச்னையில் முந்தைய, தி.மு.க., அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதனால் வணிகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும், மீண்டும் பஸ்கள் சரியாக செயல்படவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்து உரிய நடவடிக்கை எடுப்பேன். தமிழகத்தில் ரவுடிகள் கலாசாரம் முற்றிலும் ஒழிக்கப்படும்,'' என்றார்.
