ADDED : மே 02, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, மே. 1
கோபி, கருமாயா வீதியில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு மர்ம நபர் ஒருவர், அதேபகுதியில் உள்ள மாடி வீட்டில் புகுந்து, மொபைல்போனை திருடி தப்பிக்க முயன்றார். இதையறிந்த அப்பகுதியினர், அவரை பிடித்து கோபி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த நபர் கோபி, ராமர் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்த ராஜா முகமது, 32, என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.