மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் எழுமாத்துாரில் தீவிர ஓட்டு சேகரிப்பு
மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் எழுமாத்துாரில் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 14, 2026 05:27 AM
ஈரோடு, மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளராக கிருத்திகா, தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
நேற்று காலையில் எழுமாத்துார், குலவிளக்கு, பழமங்கலம் அதன் சுற்றுப்புற பகுதிகளான மேட்டுப்பாளையம்,தொட்டிபாளையம், எழுமாத்துார், அம்மன் நகர், கோட்டைமேடு, மண் கரடு, அவலுார், காரக்காட்டு வலசு, எல்லக்கடை, காந்திபுரம், கூட்டப்பள்ளி காலனி, வண்ணாம்பாறை, புதுபாளையம், குலவிளக்கு, பூசாரிபாளையம், வெள்ளியங்காடு, மேற்கு மின்னபாளையம், சாணார் பாளையம், இச்சிக்காடு, புலவன் தோட்டம், கோவில் பாளையம், காட்டூர், வடுகன்புதுார், புதுப்பாளையம், கள்ளுக்கடை நால்ரோடு, பாப்பாவலசு, வடக்கு பாளையம், வடுகனுார் காலனியில் தேர்தல் பிரச்சாரம் செய்து ஓட்டு சேகரித்தார்.
எழுமாத்துார் ஊராட்சி காரகாட்டு வலசு பகுதியில், நிலக்கடலை தோட்டத்தில் வேலை செய்த பெண்கள், தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகளிடம் ஓட்டு சேகரித்தார். அப்போது பிரதமர் மோடியின் திட்டங்கள், இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வாக்காளர்களிடம் விளக்கமளித்தார்.
