தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா தீவிர பிரச்சாரம்

மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா தீவிர பிரச்சாரம்

மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா தீவிர பிரச்சாரம்


ADDED : ஏப் 15, 2026 06:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொடக்குறிச்சி : ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா, தாமரை சின்னத்தில் ஓட்டு கேட்டு நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பா.ஜ. வேட்பாளராக கிருத்திகா, தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். மாலையில் ஈஞ்சம்பள்ளி, ஆனந்தம்பாளையம் பகுதிகளான பெரிய வெத்திபாளையம், சின்ன வெத்திபாளையம், முத்துகவுண்டன்பாளையம், வெள்ள பாறையூர், கல்யாணிபுரம், கீரமடை, கீரமடைகாலனி, செட்டி குட்டை வலசு, களத்துமின்ன பாளையம், ராக்கிபாளையம், வாத்திக்காட்டு வலசு, மடத்துபாளையம், கொமரம்பாளையம்.

பொய்யேரி, ஓடக்காட்டுவலசு, கூத்தம்பாளையம், கூத்தம்பாளையம் காலனி, தானத்துபாளையம் காலனி, நேரு நகர், கரியாகவுண்டன் வலசு, ஆனந்தம்பாளையம், வெப்பிலி, சின்னசாமி புரம், பாண்டியம்பாளையம், குட்டக்காட்டுவலசு, பாண்டிபாளையம், பாரதி நகர், பட்டாஸ்பாளி, செல்லாத்தா பாளையம், தொட்டிபாளையம் புதுார் பகுதியில் பெண்கள், தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகளிடம் ஓட்டு சேகரித்தார்.

பின்னர், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். அப்பகுதியில் முஸ்லிம் இளைஞர் அமைப்பினர் ஏற்படுத்தி இருந்த நீர் மோர் பந்தலில், மோர் பருகி பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us