மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா தீவிர ஓட்டு வேட்டை
மொடக்குறிச்சி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா தீவிர ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 18, 2026 05:39 AM
மொடக்குறிச்சி :மொடக்குறிச்சி சட்டசபை தொகுதி பா.ஜ., வேட்பாளர் கிருத்திகா, தொகுதிக்கு உட்பட்ட அஞ்சூர் ஊராட்சி, கொந்தளம் ஊராட்சி பகுதிகளான முத்துகவுண்டன் பாளையம், பூலாவலசு, பொரசப்பாளையம், ராமநாதபுரம், காரவலசு, ஜெ.ஜெ. நகர், அண்ணா நகர், நடுப்பாளையம், அஞ்சூர், நல்லசெல்லி பாளையம், குறுக்குவலசு, பெரும்பரப்பு, முத்தையன் வலசு, கள்ளிபாளையம், கள்ளுக்கடை மேடு, உதியமரம், வீரசங்கிலி, மண்திட்டு, காளிபாளையம், கொந்தளம், பறையர்நத்தம், சிலோன் காலனி, தட்டாம்பாளையத்தில், காலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
மாலையில் இச்சிபாளையம், அய்யம்பாளையம், எழுநுாற்று மங்கலம் பகுதியான திருவள்ளுவர் காலனி, வெங்கமேட்டூர், பாரதி நகர், லட்சுமி புரம், குமரபுரம், கருத்திபாளையம், வாழநாயக்கன்பாளையம், வளந்தான்கோட்டை பள்ளி முன், வாய்க்கால் செட், இச்சிபாளையம், மலைகாட்டு தோட்டம், வடிவுள்ள மங்கலம், வேப்பங்காட்டு பாறை, உழவன் நகர்,செங்கோடம்பாளையம், காந்தி நகர், சுமை தாங்கி புதுார், சுள்ளிமடை புதுார், முருகம்பாளையம், பனபாளையம், பள்ளகாட்டூர், வெட்டுகாட்டூர், இந்திரா நகர், குதிரைகல்மேடு, வ.உ.சி. நகர், கலிங்கநகர், குப்பம்பாளையம், தேவகியம்மாபுரம் பகுதிகளில் பெண்கள், தொழிலாளர்கள், குடியிருப்புவாசிகளிடம் ஓட்டு சேகரித்தார்.
தொகுதியில் அடிப்படை பிரச்னைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, கிருத்திகா ஓட்டு சேகரித்தார்.
