ADDED : மே 26, 2026 04:42 AM
ஈரோடு:மொடக்குறிச்சி தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., சண்முகன், ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமியை, அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தொகுதி மக்களின் அத்தியாவசிய தேவை மற்றும் முக்கிய பிரச்னை குறித்து விவாதித்தார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., கூறியதாவது: தொகுதியில் திடக்கழிவுகளை முறையாக அகற்றி, துாய்மை பணிகளை தீவிரப்படுத்துதல். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புதிய கழிப்பிடங்கள் அமைத்தல். தற்போதைய கழிப்பிடங்களை சீரமைத்தல். கிராமப்புறப் பகுதிகளில் இரண்டு பெரிய சாலைகளுக்கு இடையில் உள்ள கிராமங்களுக்கு சிறிய பேருந்து சாதியமில்லாத இடங்களுக்கு பேட்டரி கார் பயன்படுத்துவது. அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி துாய்மையான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக உள்கட்டமைப்பு மற்றும் ஆன்மிக சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார். அவருடன் அருள்சுந்தரம், டி.வி.கே., நிர்வாகிகள் பொறியாளர் சிவலிங்கம், பாலசுப்பிர
மணியம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
