தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மொடக்குறிச்சி த.வெ.க., வேட்பாளர் கட்சி வாக்குறுதிகளை கூறி பிரசாரம்

மொடக்குறிச்சி த.வெ.க., வேட்பாளர் கட்சி வாக்குறுதிகளை கூறி பிரசாரம்

மொடக்குறிச்சி த.வெ.க., வேட்பாளர் கட்சி வாக்குறுதிகளை கூறி பிரசாரம்


ADDED : ஏப் 17, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு : மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில், தமிழக வெற்றி கழகம் சார்பில், பொறியாளர் டி.சண்முகன் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தொகுதிக்கு உட்பட்ட சின்ன கிணத்து பாளையம், பள்ளபாளையம், பாறை வலசு, கனகபுரம், ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நேற்று பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரித்தார். பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புக்கு தனி இலாகா உருவாக்கப்படும்.

ஒஅன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் கட்டணமின்றி ஆண்டுக்கு, 6 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக இராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும்.

பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் பேனிக் பட்டன் பொருத்தப்படும். கட்சி தலைவரின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாடு, உள்ளூர் விவசாய பிரச்னைகள் குறித்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள், பெண்கள், தொழிலாளர்களிடம் கூறி ஓட்டு சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் கெளதம், கொடுமுடி ஒன்றிய செயலாளர் ராம் பிரகாஷ், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் தினேஷ், ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் நீலாவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us