மொடக்குறிச்சி த.வெ.க., வேட்பாளர் சண்முகன் தீவிர ஓட்டு சேகரிப்பு
மொடக்குறிச்சி த.வெ.க., வேட்பாளர் சண்முகன் தீவிர ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 13, 2026 03:23 AM

ஈரோடு:மொடக்குறிச்சி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில், வேட்பாளராக சண்முகன் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார். தொகுதிக்கு உட்பட்ட அவல்பூந்துறை பேரூராட்சி, துய்யம்பூந்துரை, கனகபுரம், கஸ்பாபேட்டை, முத்துகவுண்டன்பாளையம், லக்காபுரம் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் நேற்று காலை ஈடுபட்டு ஓட்டு சேகரித்தார்.
அப்போது பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாப்புக்கு தனி இலாகா உருவாக்கப்படும். அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் கட்டணமின்றி ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். பொது போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் பேனிக் பட்டன் பொருத்தப்படும். கட்சி தலைவரின் தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமின்றி, மொடக்குறிச்சியில் நீண்ட காலமாக நிலவும் சாலை வசதி, குடிநீர் தட்டுப்பாடு, உள்ளூர் விவசாய பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள், பெண்கள், தொழிலாளர்களிடம் கூறி ஓட்டு சேகரித்தார்.வேட்பாளருடன் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தவெக செயலாளர் கெளதம், கொடுமுடி ஒன்றிய செயலாளர் ராம்பிரகாஷ், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் தினேஷ், ஈரோடு மாநகர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் நீலாவதி உள்ளிட்டோர் சென்றனர்.
