sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு

/

மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு

மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு

மாதிரி ஓட்டுச்சாவடி அமைப்பு


ADDED : ஜன 26, 2025 04:08 AM

Google News

ADDED : ஜன 26, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, காளை மாட்டு சிலை அருகேயுள்ள மாநகராட்சி துவக்-கப்பள்ளியில், மாதிரி ஓட்டுச்சாவடி மையத்தை, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகும், மாநகராட்சி ஆணையருமான ஸ்ரீகாந்த் துவக்கி வைத்து, வாக்காளிப்பதன் முக்கியத்துவம் பற்றி பேசினார். தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டும், இடைத்-தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தியும் மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு இயந்-திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் வைக்கப்பட்டு, முதன்முறை வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விளக்கம் தரப்பட்-டது. ஓட்டுச்சாவடி முன் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்-தியும், போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

ரூ.6 லட்சம் ரொக்கம் பறிமுதல்

* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி மதன் தலைமையிலானவர்கள், கருங்கல்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த 'இக்கோ' காரில், ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, களத்துவளவை சேர்ந்த அண்ணாதுரை பணத்தை எடுத்து வந்திருந்தார்.

* ஈரோடு, பளையபாளையம் அருகே பறக்கும் படை அதிகாரி கேசவன் தலைமையில், இன்னோவா கிரிஸ்டா காரை சோதனை-யிட்டனர். காரில் வந்த திருப்பூர், கனியம்பூண்டியை சேர்ந்த ரங்க-சாமி மனைவி கவிதா கொண்டு வந்த, 2.50 லட்சம் ரூபாயை, உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்தனர்.

* ஈரோடு, பி.பி.அக்ரஹாரம் அருகே பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் நடந்த சோதனையில், காரில் வந்த அந்தியூர் அருகே தவிட்டுபாளையத்தை சேர்ந்த ராமன் எடுத்து வந்த, 2.50 லட்சம் ரூபாய் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறி-முதல் செய்தனர்.

சீமான் பிரசாரத்துக்கு பலத்த பாதுகாப்பு

நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த இரு தினங்களாக, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சீமான் பிரசாரத்துக்கு பாதுகாப்பு அளித்து வருகின்-றனர். மேலும் சீமான் தங்கியுள்ள ராயல் ரெசிடென்சி முன்பு-றமும், சீமான் பிரசார வேனுடனும், பிரச்சாரம் செய்யும் இடத்-திலும் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

228 பேர் தபால் ஓட்டுப்பதிவு

இடைத்தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், 2,529 பேர், மாற்-றுத்திறனாளிகள், 1,570 பேர் என, 4,099 பேருக்கு தபால் ஓட்டுப்-பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது. இதன்படி அவர்களிடம் ஓட்டு சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த, 23ல், 116 பேரிடம், 24ல், 112 பேரிடம் என, 228 பேரிடம் தபால் ஓட்டை சேகரித்தனர். இந்நாட்களில் பல்வேறு காரணத்தால், 28 பேர் ஓட்-டுப்பதிவு செய்யவில்லை. அவர்களுக்கு வரும், 27ல் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us