/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைலாசநாதர் கோவிலில் சோமவார பூஜை நிறைவு
/
கைலாசநாதர் கோவிலில் சோமவார பூஜை நிறைவு
ADDED : டிச 16, 2025 09:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: கார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரமாகும். கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை தோறும் இந்த விரதம் கடைபிடிக்கப்படும்.
கார்த்திகை மாத முதல் திங்கள்கிழமையில் இந்த விரதத்தை பலர் தொடங்கினர். கார்த்திகை மாதம் நேற்று திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. அதேசமயம் சோமவாரம் என்பதால், சென்னிமலை கைலாசநாதர் கோவிலில், 108 சங்கு பூஜை, கலச வேள்வி, யாகசாலை பூஜை நடந்தது. அதை தொடர்ந்து கைலாசநாதருக்கு சங்காபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. விரதம் மேற்கொண்ட நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, விரதத்தையும் நிறைவு செய்தனர்.

