ADDED : ஏப் 18, 2026 05:38 AM
ஈரோடு :ஈரோடு கருங்கல்பாளையம் வீரவீதியில் கடந்த, 15ல் கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வருவதற்கு முன்னதாக ஆரத்தி தட்டில் தலா, 100 ரூபாய் வழங்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் அளித்த புகாரின்படி, கருங்கல்பாளையம் போலீசார் அ.தி.மு.க.,வை சேர்ந்த கார்த்தி உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
* திங்களூரில் வேட்பாளர் வருகையை முன்னிட்டு தி.மு.க.,வை சேர்ந்த சக்தி, அனுமதியின்றி பட்டாசு வெடித்ததாக திங்களூர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
* பெருந்துறையில் தபால் ஓட்டு போடுபவர்கள் பட்டியலுடன், உரிய ஆவணங்கள் இன்றி, 56 ஆயிரத்துடன் நின்றிருந்த பவானி பெரிய புலியூரை சேர்ந்த சுரேஷ்குமார் மீது, பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
* பெருந்துறை அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயக்குமார், செட்டிதோப்பு பகுதியில் உரிய அனுமதி பெறாமல் பிரசார நோட்டீஸ் வினியோகம் செய்துள்ளார். இதுதொடர்பாக வேட்பாளர், பெருந்துறை பகுதி அம்மா பேரவை செயலாளர் மணி மீது, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிந்தனர்.
