ADDED : செப் 24, 2026 06:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
பெரிய சேமூர் சுக்கிரமணிய கவுண்டன் வலசை சேர்ந்தவர் ஜீவா, 34.
கருங்கல்பாளையம் காவிரி சாலை ராயல் விங்ஸ் ஹோண்டா சர்வீஸ் சென்டரில்,
10 ஆண்டுகளாக கிளை பொறுப்பாளராக பணிபுரிகிறார்.
கடந்த, 21
இரவு 7:30 மணிக்கு வேலை முடிந்து, சர்வீஸ் சென்டரை மூடி விட்டு சென்றார்.
மறுநாள் காலை, 8:15 மணிக்கு வந்தபோது, சர்வீஸ் சென்டர் பூட்டு
உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயரின்
பூட்டை உடைத்து, 10,500 ரூபாய் திருடப்பட்டுள்ளது. கருங்கல்பாளையம்
போலீசார் விசாரிக்கின்றனர்.
