ADDED : ஜூலை 31, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழக
அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் கடந்த ஜன., 1
மற்றும் அதற்கு பின் சி.பி.எஸ்., திட்டத்தில் பணி ஓய்வு பெற்ற, இறந்த அரசு
ஊழியர்கள், ஆசிரியர்களும் தற்காலிகமாக மாதாந்திர இடைக்கால தொகை
வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
ஓய்வு பெற்ற பணியாளர்கள், இறந்த அரசு
ஊழியரின் வாரிசுதாரர்கள், இறுதியாக பணிபுரிந்த அலுவலகத்தில்
விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.கூடுதல் விபரத்தை மாவட்ட கருவூல அலுவலரை தொடர்பு கொண்டு அறியலாம்.
