/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கணக்கம்பாளையத்தில் நிலாச்சோறு வழிபாடு
/
கணக்கம்பாளையத்தில் நிலாச்சோறு வழிபாடு
ADDED : பிப் 10, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்; டி.என் பாளையம் அருகே கணக்கம்பாளையத்தில், நேற்று முன்தினம் இரவு நிலாச்சோறு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள், சிறுமியர், ஆண்கள் என வயது, வித்தியாசமின்றி ஓரிடத்தில் கூடினர்.
தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த இனிப்பு, கார வகை உள்ளிட்ட தின்பண்டம், உணவை வீதி மையத்தில் வைத்து பாடல் பாடி கும்மி அடித்தும், பாரம்பரிய விளையாட்டு விளையாடியும் மகிழ்ந்தனர். பிறகு பலகாரம், உணவை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். ஊர்மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும் நிலாச்சோறு வழிபாட்டில் ஈடுபட்டு வருவதாக, மக்கள் தெரிவித்தனர்.

