/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்து
/
ஈரோடு சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட மாடுகள் வரத்து
ADDED : பிப் 16, 2024 10:15 AM
ஈரோடு: கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு, 800க்கும் மேற்பட்ட மாடுகளை, விவசாயிகள் விற்பனைக்கு அழைத்து வந்தனர்.
ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 5,000 ரூபாய் முதல், 25,000 ரூபாய் மதிப்பில், 70 கன்றுகள், 25,000 ரூபாய் முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 300 எருமை மாடுகள், 25,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகளை விற்பனைக்கு அழைத்து வந்திருந்தனர். மேலும், 80,000 ரூபாய்க்கு மேலான விலையில் கலப்பின மாடுகள், 100க்கும் மேற்பட்டவை வந்திருந்தன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹராஷ்டிரா போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க ஆர்வமாக வந்தனர்.
கோடை துவங்கி பசுந்தீவன பற்றாக்குறை ஏற்பட துவங்கியதால், மாடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் காட்டினர். வெளி மாநில வியாபாரிகள் அதிக எண்ணிக்கையில் மாடு வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையாகின.