ADDED : பிப் 13, 2026 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு சம்பத் நகர் கலெக்டர் அலுவலக சாலையை சேர்ந்தவர் விக்ரம். இவரின் மனைவி மதுஸ்ரீ, 19; தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எட்டு மாதமாக பெற்றோர் வீட்டில் வசித்தார். கடந்த, 9ம் தேதி இரவு, குழந்தையுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. தாய் ஆனந்தி புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

