நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி :ஈரோடு அருகே கூரப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன், 24; இவரின் மனைவி, பிரேமா, 20; தம்பதிக்கு, 14 மாத ஆண் குழந்தை உள்ளது.
கவுந்தப்பாடி அருகே ஓடத்துறையில் பெற்றோர் வீட்டில் மூன்று மாதமாக பிரேமா வசித்து வந்தார். கடந்த, 23ம் தேதி குழந்தையுடன், பிரேமா மாயமானார். அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ராமச்சந்திரன் புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.