/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேரனுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்
/
பேரனுடன் மகள் மாயம் தாய் போலீசில் புகார்
ADDED : அக் 26, 2025 12:42 AM
கோபி, கோபி அருகே உக்கரத்தை சேர்ந்தவர் மோகனப்பிரியா, 28; இவரின் கணவர் சத்தி அருகே காவிலிபாளையத்தை சேர்ந்த சுரேஷ், 35; தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், உக்கரத்தில் பெற்றோர் வீட்டில் ஏழாண்டுகளாக மோகனப்பிரியா வசித்து வருகிறார். கடந்த, 22ம் தேதி மாலை மகனுடன் மாயமாகி விட்டார். மோகனப்பிரியா தாயார் ரீமா புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பெருந்துறை, பாரதி நகரை சேர்ந்த தொழிலாளி தர்மலிங்கம் மகள் சபரீசா, 19; தனியார் கல்லுாரி பி.எஸ்.சி., முதலாமாண்டு மாணவி. கடந்த, 22ம் தேதி இரவு முதல் காணவில்லை. தந்தை புகாரின்படி பெருந்துறை போலீசார் தேடி வருகின்றனர்.

