/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
100 நாள் வேலையை முழுமையாக வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
/
100 நாள் வேலையை முழுமையாக வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
100 நாள் வேலையை முழுமையாக வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
100 நாள் வேலையை முழுமையாக வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : அக் 15, 2025 01:02 AM
ஈரோடு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம், மாவட்ட துணை தலைவர் லலிதா தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கோரிக்கை குறித்து மாவட்ட செயலர் அருந்ததி, மாவட்ட பொருளாளர் மல்லிகா பேசினர்.
மாநில அளவில், 100 நாள் வேலை திட்டத்தை, நகர்புறம் மற்றும் டவுன் பஞ்சாயத்துக்களிலும் விரிவுபடுத்த வேண்டும்.
இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்ற அனைவருக்கும் தடையின்றி முழுமையாக பணி வழங்க வேண்டும். நுண் நிதி நிறுவனம் மூலம் கடன் வழங்குவதை கைவிட வேண்டும். மகளிர் குழு மூலம் பெண்களுக்கு அரசு வங்கிகள் மூலமே கடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.