ADDED : அக் 05, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே பெரியபுலியூரை சேர்ந்தவர் சந்திரன், 30, டிரைவர்; இவரின் தாய் எட்டு மாதங்களுக்கு முன் உடல் நிலை சரியில்லாமல் இறந்தார்.
துக்கத்தில் மது குடித்தபடி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். கடந்த, 3ம் தேதி இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.