ADDED : மே 09, 2026 03:50 AM
ஈரோடு:ஈரோடு, பழையபாளையம், சுத்தானந்தன் நகர், கருப்பராயன் கோவில் பின்புறம் வசிக்கும் பெரியசாமி மனைவி சாந்தி. துணிகளை அயர்ன் செய்து தரும் வேலை செய்கிறார்.
தம்பதிக்கு புவனேஸ்வரி, 24, என்ற மகள், ஒரு மகன் உள்ளனர். ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்த கோகுல் என்பவரை காதலித்து புவனேஸ்வரி திருமணம் செய்தார். தம்பதிக்கு, ஏழு மற்றும் நான்கு வயதில் இரு பெண் குழந்தை உள்ளது. தம்பதி இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டதில், குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு புவனேஸ்வரி வந்தார். கடந்த, 6ம் தேதி குழந்தைகளுடன் புவனேஸ்வரி மாயமாகி விட்டார். சாந்தி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
* கோபி அருகே அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நேத்ரா, 19; கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.காம்., முதலாமாண்டு படிக்கிறார். கடந்த, 6ம் தேதி கல்லுாரி சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை கமலக்கண்ணன் புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
