/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூன்று தோட்டங்களில் மோட்டார் ஒயர் திருட்டு
/
மூன்று தோட்டங்களில் மோட்டார் ஒயர் திருட்டு
ADDED : ஜன 21, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: வெள்ளகோவில் அருகே அனுமந்தபுரம், வெள்ளியங்காடு கிராமத்தில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் உள்ள மின் மோட்டார்களின் ஒயரை, யாரோ அறுத்து திருடி சென்று விட்டனர். இதேபோல் அதே கிராமத்தில்
கருணாநிதி, அர்சுனன் ஆகியோர் தோட்டத்திலும் விவசாய மின் மோட்டார்களின் ஒயர் திருட்டு போயுள்ளது. ஒரே கும்பல் இதில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளகோவில்
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

