/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முத்துார் பிரிவில் இருளில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
முத்துார் பிரிவில் இருளில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
முத்துார் பிரிவில் இருளில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
முத்துார் பிரிவில் இருளில் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 06, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முத்துார் பிரிவில் இருளில்
தவிக்கும் வாகன ஓட்டிகள்
காங்கேயம், நவ. 6-
காங்கேயத்தில், கோவை--திருச்சி தேசிய நெடுஞ்சாலை, போக்குவரத்து அதிகமுள்ள சாலையாக உள்ளது. இதனால் நெடுஞ்சாலை துறை சார்பில் தற்போது அகலப்படுத்தும் பணி நடக்கிறது. தற்போது காங்கேயம்-வெள்ளகோவில் சாலையில் முத்துார் பிரிவில், மின் கம்பம் இல்லாமல், தெருவிளக்குகளும் அமைக்க முடியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியை கடப்பது, வாகன ஓட்டிகளுக்கு சவாலாக உள்ளது. எனவே சாலையில், 200 மீட்டருக்கு ஒரு கம்பம் அமைத்து, தெருவிளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறைக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.