/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பண்ணாரி கோவிலில் நகரும் நிழற்குடைகள்
/
பண்ணாரி கோவிலில் நகரும் நிழற்குடைகள்
ADDED : செப் 22, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது.
கோவிலுக்கு கர்நாடகா மாநில பக்தர்களும் அதிகம் வருகின்றனர். அமாவாசை நாட்களில் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். அப்போது தரிசனத்துக்காக நிற்கும் பலர், வெயிலில் நிற்க நேரிட்டது. கடந்த சில வாரங்களாகவே, வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில், உப்பு குண்டத்தை சுற்றி தரைக்கம்பளம் விரிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரும் நிழற்குடைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.