/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எம்.பி.ஈ.ஏட்., முதுநிலை பட்டப்படிப்பு தொடக்கம்
/
எம்.பி.ஈ.ஏட்., முதுநிலை பட்டப்படிப்பு தொடக்கம்
ADDED : டிச 19, 2024 01:30 AM
காங்கேயம், டிச. 19-
ஜி.எஸ். உடற் கல்வியியல் கல்லுாரியில்,
எம்.பி.ஈ.ஏட்., முதுநிலை பட்டப்படிப்பு தொடங்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஜி.எஸ். உடற் கல்வியியல் கல்லுாரி, திருப்பூர், கோயம்புத்துார், ஈரோடு, சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தனியார் கல்லுாரியாக அமைந்துள்ள உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி நிறுவனமாகும். இக்கல்வி நிறுவனத்தில், 2025ம் ஆண்டு முதல் இரண்டாண்டு முதுநிலை உடற்கல்வி ஆசிரியர் பட்டப் படிப்பு, புது டெல்லி தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில். மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சென்னை ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டு தொடங்கப்பட உள்ளது என, ஜி.எஸ்.
உடற்கல்வியியல் முதல்வர் தெரிவித்துள்ளார்.