/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கனிராவுத்தர் குளத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
/
கனிராவுத்தர் குளத்தில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
ADDED : ஜூலை 22, 2025 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சோலார் மற்றும் கனிராவுத்தர் குளம் அருகில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும் என, தி.மு.க., அரசு அறிவித்தது. இதில் சோலாரில் பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு வரவில்லை.
அதேசமயம் கனிராவுத்தர் குளத்தில் எவ்வித பணியம் தொடங்கவில்லை.
இந்நிலையில் கனிராவுத்தர் குளத்தில் பஸ் ஸ்டாண்ட் அமையவுள்ள இடத்தை, கமிஷனர் அர்பித் ஜெயின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இடத்தின் பரப்பளவு, திட்ட மதிப்பீடு, பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் விதம், வழித்தடங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

