தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நகராட்சி ஒப்பந்த துாய்மை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நகராட்சி ஒப்பந்த துாய்மை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

நகராட்சி ஒப்பந்த துாய்மை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 08, 2026 07:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 07:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:பவானி நகராட்சியில், 27 வார்டுகளில் குப்பை அகற்றும் பணியில் நிரந்தர துாய்மை தொழிலாளர், 36 பேர், ஒப்பந்த தொழிலாளர்கள், 73 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இதில் குறைந்தபட்ச ஊதியம் கேட்டு, ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நகராட்சி கமிஷனர் அழைப்பின் பேரில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தினக்கூ-லியாக, 646 ரூபாய் வழங்க பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் நகராட்சி நிர்வாகம் மறுத்து விட்டதால், கடந்த, 5ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில், ஒப்பந்த தொழிலாளர் ஈடுபட்-டுள்ளனர்.

பவானி-அந்தியூர் பிரிவில், ஈரோடு மாவட்ட உள்ளாட்சி துறை பணியாளர் சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி, பவானி நகராட்சி உள்ளாட்சி துறை பணியாளர் சங்க தலைவர் பாலமு-ருகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us