ADDED : மே 29, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, கேரளா முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து, ஈரோடு காந்திஜி சாலை ஜவான் பவன் அலுவலகம் அருகே, மா.கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சண்முகம் பேசினார். கேரளா முன்னாள் முதல்வர் பினராய் விஜய் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறலையும், மா.கம்யூ., பொது செயலாளர் பேபி உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்களை டில்லியில் கைது செய்ததை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மா.கம்யூ., நிர்வாகிகள், சி.ஐ.டி.யு., சுப்பிரமணியம், பொன்பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
