/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிவுநீரை சுத்திகரிக்க எதிர்ப்பு நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
/
கழிவுநீரை சுத்திகரிக்க எதிர்ப்பு நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
கழிவுநீரை சுத்திகரிக்க எதிர்ப்பு நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
கழிவுநீரை சுத்திகரிக்க எதிர்ப்பு நகராட்சி வாகனம் சிறைபிடிப்பு
ADDED : அக் 04, 2025 12:56 AM
புன்செய்புளியம்பட்டி, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கழிவு நீருடன் வந்த நகராட்சி வாகனத்தை, விவசாயிகள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
புன்செய் புளியம்பட்டி அருகே அண்ணா நகரில், மலம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சி வாகனத்தில் கழிவு நீரை கொண்டு வந்து, சுத்திகரிப்பு நிலையத்தில் உரமாக்கும் பணியை, நேற்று மேற்கொள்ள முயற்சி நடந்தது.
இதையறிந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், விவசாயிகள், சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனத்தை சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த நகராட்சி கமிஷனர் கருணாம்பாள், நகர்மன்ற தலைவர் தலைவர் ஜனார்த்தனனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
''ஆறு கோடி ரூபாய் மதிப்பில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர், விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என்று கமிஷனர் தெரிவித்தார்.
ஆனாலும், விவசாயிகள் ஏற்க மறுத்து தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கழிவு நீரை சுத்திகரிக்காமல், வாகனத்தை திரும்ப எடுத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம்
பரபரப்பு ஏற்பட்டது.