/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாக்கப்பட்ட விடுதி ஊழியர் சாவு கும்பல் மீது பாய்ந்தது கொலை வழக்கு
/
தாக்கப்பட்ட விடுதி ஊழியர் சாவு கும்பல் மீது பாய்ந்தது கொலை வழக்கு
தாக்கப்பட்ட விடுதி ஊழியர் சாவு கும்பல் மீது பாய்ந்தது கொலை வழக்கு
தாக்கப்பட்ட விடுதி ஊழியர் சாவு கும்பல் மீது பாய்ந்தது கொலை வழக்கு
ADDED : ஜூலை 20, 2025 05:16 AM
ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில், பெரம்பலுார் மாவட்டம் துறையூரை சேர்ந்த காந்தி, 55, ஊழியராக வேலை செய்தார். இரு தினங்களுக்கு முன் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லுாரி அருகே கொத்துகாரர் தோட்டம் பகுதியில் இரவில் நடந்து சென்றார். அப்போது நான்கு பேர் கும்பல், ஒரு வட மாநில வாலிபரை மிரட்டி மொபைல் போன், பணம் கேட்டு தாக்கியது.
அந்த வாலிபர் தப்பி ஓடிய நிலையில், அப்போது நடந்து சென்ற காந்தியை, அவர் என நினைத்து, போதையில் இருந்த நால்வரும், கம்பியால் சரமாரியாக தாக்கினர். அவர் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வர கும்பல் ஓட்டம் பிடித்தது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட காந்தி, நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
இது தொடர்பாக வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அரவிந்த், 29, சந்தோஷ், 20, நந்தேஸ்வரன், 23, மற்றும் 17 வயது சிறுவனை, வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர். கோவை கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனையும், ஈரோடு கிளை சிறையில் மூவரையும் அடைத்தனர்.
தாக்குதலுக்கு ஆளானவர் இறந்ததால், வழிப்பறி வழக்குடன் நான்கு பேர் மீதும் கொலை வழக்கும் பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

