sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

திருடுவதற்கு மின்மோட்டார் இல்லாததால் கிணற்றில் உரத்தை கொட்டிய மர்ம நபர்கள்

/

திருடுவதற்கு மின்மோட்டார் இல்லாததால் கிணற்றில் உரத்தை கொட்டிய மர்ம நபர்கள்

திருடுவதற்கு மின்மோட்டார் இல்லாததால் கிணற்றில் உரத்தை கொட்டிய மர்ம நபர்கள்

திருடுவதற்கு மின்மோட்டார் இல்லாததால் கிணற்றில் உரத்தை கொட்டிய மர்ம நபர்கள்


ADDED : பிப் 20, 2025 07:32 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: திருட வந்த கிணற்றில் எதுவும் இல்லாததால், அருகில் வைத்தி-ருந்த ரசாயன உரத்தை அந்த கிணற்றில் மர்மநபர்கள் கொட்டிச் சென்றுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தாமரைகோழியம்பட்டி, கண-பதிப்பட்டி, மத்தியம்பட்டி, கே.வேட்ரப்பட்டி, வடுகப்பட்டி உள்-ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில், மின்மோட்டார் மற்றும் ஒயர்-களை மர்ம நபர்கள் இரவில் அடிக்கடி திருடிச் செல்கின்றனர். இது குறித்து அரூர் மற்றும் மொரப்பூர் போலீசில் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.

கடந்த, 16ல் இரவு மத்தியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி என்-பவரது விவசாய கிணற்றில், மின்மோட்டாரை திருட வந்த-வர்கள், அங்கு பொருட்கள் எதுவும் இல்லாததால் ஏமாற்றடைந்-தனர். இதனால் ஆத்திரமடைந்து மின்மோட்டார் அறையை உடைத்துள்ளனர். அங்கு, பயிர்களுக்கு பயன்படுத்தப்பட்டு மீதி வைத்திருந்த ரசாயன உரத்தை கிணற்றில் கொட்டினர். இதனால், கிணற்றிலிருந்த நீர் துர்நாற்றத்துடன் நிறம் மாறியதுடன், குடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கிணற்று நீரை, கடந்த, 2 நாட்களாக இறைத்து, கிணற்றை சுத்தம் செய்தனர்.

மேலும், மறுநாள், 17ம் தேதி அதே பகுதியை சேர்ந்த விவசா-யிகள் ரவி, தாமரைகோழியம்பட்டி கிருஷ்ணன், சுரேஷ், கணப-திப்பட்டி தனசேகரன் ஆகியோரது கிணற்றில் இருந்த மின்ஒயர்-களை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து, தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துவோர் அரூர் விவசாயிகள் நலச்சங்கத்தினர், அரூர் டி.எஸ்.பி., கரிகால் பாரிசங்-கரிடம் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us