/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாகர்கோவில் - கோவை ரயில் சேவை அக்.,4ல் மாற்றம்
/
நாகர்கோவில் - கோவை ரயில் சேவை அக்.,4ல் மாற்றம்
ADDED : அக் 02, 2025 12:44 AM
ஈரோடு:திண்டுக்கல் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள் வரும், 4 ல் நடப்பதால், அன்று ஒரு நாள் மட்டும் நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ரயில் எண் - 16321 - நாகர்கோவில் - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து காலை, 8:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் விருதுநகர் - கரூர் மார்க்கமாக இயக்கப்படாமல், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக கரூர் மார்க்கமாக இயக்கப்படும். இந்த ரயில் திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், எரியோடு, பாளையம் ஆகிய ஸ்டேஷன் வழியாக செல்லாது.
அதுபோல, ரயில் எண் - 16322 - கோவை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் காலை, 8:00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் கரூர் - விருதுநகர் இடையே இயக்கப்படாது. மாற்றாக, திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழி இயக்கப்படும். பாளையம், எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஸ்டேஷன்கள் செல்லாது.