/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாகர்கோவில் ரயில் இயக்கம் பராமரிப்பு பணிக்காக மாற்றம்
/
நாகர்கோவில் ரயில் இயக்கம் பராமரிப்பு பணிக்காக மாற்றம்
நாகர்கோவில் ரயில் இயக்கம் பராமரிப்பு பணிக்காக மாற்றம்
நாகர்கோவில் ரயில் இயக்கம் பராமரிப்பு பணிக்காக மாற்றம்
ADDED : நவ 04, 2025 02:09 AM
திருப்பூர் மதுரை கோட்டத்தில், ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, கோவை - நாகர்கோவில் ரயில் இயக்கம் மாற்றப்படுகிறது.
வரும், 6, 8, 11, 13 மற்றும், 15ம் தேதி கோவையில் இருந்து புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (எண்:16322) கரூர் கடந்து, திண்டுக்கல், அம்பாத்துறை, கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் என வழக்கமான வழித்தடத்தில் பயணிக்காது.
மாறாக, கரூரில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை வழியில் பயணிக்கும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு ரயில் இயங்கும் போதும், அருப்புக்கோட்டை - திருச்சி மார்க்கமாக இயங்கும்; வழக்கமாக வழித்தடத்தில் பயணிக்காது. 'நாகர்கோவில் ரயில் வழித்தட மாற்றத்துக்கு ஏற்ப பயணிகள், பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்,' என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.