sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நல்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்

/

நல்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்

நல்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்

நல்லுார் பஞ்., மக்கள் குடிநீர் கேட்டு மறியல்


ADDED : ஜூன் 30, 2025 03:49 AM

Google News

ADDED : ஜூன் 30, 2025 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புளியம்பட்டி: புன்செய் புளியம்பட்டி அருகே நல்லுார் பஞ்.,க்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்-டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 25 நாட்க-ளாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பஞ்., நிர்வா-கத்தில் பலமுறை புகாரளித்தும்

பலனில்லை.

இந்நிலையில் பெண்கள், ஆண்கள் என, 200க்கும் மேற்-பட்டோர், சத்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில், நல்லுார் பஸ் நிறுத்தத்தில் நேற்று, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புன்செய்புளியம்பட்டி போலீசார் சமாதானம் செய்தும் ஏற்காமல் மறியலை தொடர்ந்தனர்.

கடந்த, 25 நாட்களாக குடிநீர் வரவில்லை. பஞ்சாயத்தில் முறை-யிட்டால், குழாய் உடைந்து விட்டது என கூறுகின்றனர். உடைப்பை சரி செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். 25 நாட்களாக குடிநீர் வராதது அதிகாரிகளுக்கு தெரியாதா? எனக்-கேட்டு, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பவானிசாகர் பி.டி.ஓ., இந்திராணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவ-ரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us