/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி 2வது பட்டமளிப்பு விழா
/
நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி 2வது பட்டமளிப்பு விழா
நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி 2வது பட்டமளிப்பு விழா
நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி 2வது பட்டமளிப்பு விழா
ADDED : மார் 02, 2024 03:29 AM
ஈரோடு: ஈரோடு நந்தா அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடந்தது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை தாங்கினார். கல்லுாரி செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளர் திருமூர்த்தி முன்னிலை வகித்தனர். கோயமுத்துார் ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் சிவக்குமார், தர வரிசையில் இடம் பெற்ற ஒன்பது பேருக்கு தங்க பதக்கம், 155 மாணவ-, மாணவியருக்கு பட்டம் வழங்கி பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.-