தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நந்தா சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் சாதனை

நந்தா சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் சாதனை

நந்தா சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் சாதனை


ADDED : மே 18, 2024 01:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2024 01:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு நந்தா சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் ௨ தேர்வில், ௧௦௦ சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

நந்தா சென்ட்ரல் பள்ளியில் சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வில், மாணவி எஸ்.ரிதன்யா, 500க்கு 477 மதிப்பெண் பெற்று முதலிடம்; மாணவி ஜே.பி.வர்ணிகா, 473 பெற்று இரண்டாமிடம்; மாணவி என்.வேதவர்ணா, 472 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.

இதேபோல் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளி மாணவன் எம்.அக்சய், 481 மதிப்பெண் பெற்று முதலிடம்; மாணவன் எம்.அபிஜித், 475 எடுத்து இரண்டாமிடம்; மாணவி எஸ்.அஸ்மிதா, 471 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

பிளஸ் ௨ தேர்வில், நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவன் கே.கவுசிக், 449 மதிப்பெண் பெற்று முதலிடம்; மாணவன் எம்.எஸ்.நவீன், 423 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம்; மாணவன்

எஸ்.ஆதித்யா, மாணவி ஆர்.பி.ரேஷ்ணவி, 420 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

இதேபோல் நந்தா சென்ட்ரல் சிட்டி பள்ளியில் மாணவி வி.தனிஷ்கா, 483 மதிப்பெண் பெற்று முதலிடத்தயும், மாணவி பூமிகா கோச்ச, 474 பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி ஹர்ஷிதா ஜெயின், ௪73 எடுத்து மூன்றாமிடம் பெற்றனர். ஏழு மாணவர்கள் தமிழ் பாடத்திலும், இரண்டு மாணவர் கணிதத்திலும் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்தனர்.

சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், பள்ளிகளின் முதல்வர்கள் பிரகாஷ் நாயர், ராஜேஷ், பள்ளி நிர்வாக அதிகாரி மனோகரன் ஆகியோர், சாதித்த மாணவர்கள், உறுதுணையாக நின்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us