மாநில கைப்பந்து போட்டியில்நந்தா பாலிடெக்னிக் வெற்றி
மாநில கைப்பந்து போட்டியில்நந்தா பாலிடெக்னிக் வெற்றி
ADDED : ஏப் 29, 2026 05:37 AM
ஈரோடு:பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான தடகள சங்கத்தின் சார்பாக மாநில அளவில், ஆண்களுக்கான கைப்பந்து போட்டி, ஆர்.வி.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. உள் சுற்றுகளின் அடிப்படையில் மண்டல அளவில் தேர்ந்தொடுக்கப்பட்ட, 11 அணிகள் கலந்து கொண்டன.
இதில் சேலம் மண்டலத்தின் சார்பில் தியாகராஜர், ஈரோடு மண்டலத்தின் சார்பில் நந்தா மற்றும் ஸ்ரீமகாலெட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதி போட்டியில் நாகை மண்டலத்தின் ஸ்ரீமகாலெட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரியை, ஈரோடு மண்டல நந்தா பாலிடெக்னிக் கல்லுாரி அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களை, உடற்கல்வி இயக்குநர் மணிகண்டன், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன், அங்கதத்தினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்களான நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதல்வர் மோகன்குமார் உள்பட பலர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.
