/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போதை பொருள் பறிமுதல் ஒடிசா மாநில வாலிபர் கைது
/
போதை பொருள் பறிமுதல் ஒடிசா மாநில வாலிபர் கைது
ADDED : மே 30, 2024 01:28 AM
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் கஞ்சா புழக்கம் இருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாராபுரம், மதுக்கம்பாளையம் பிரிவு அருகே, சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்தவரிடம் விசாரணை செய்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை செய்தபோது, கையில் வைத்திருந்த பையில், மூன்று கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர் ஒடிசா மாநிலம், பலான்கீர் பகுதியை சேர்ந்த ராஜ்ராம்குமார் மகன் சபிலாகுமார், 31, என்பதும், திருப்பூர், அவிநாசி பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், வாட்ச்மேன் வேலை செய்து கொண்டே, கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த தாராபுரம் மதுவிலக்கு போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.