ADDED : டிச 03, 2024 07:21 AM
ஈரோடு: பள்ளிகளின் கல்வி தரத்தை அறியும் விதமாக, அனைத்து வகை பள்ளிகளுக்கும், மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அடைவு தேர்வை நடத்துகிறது. மூன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை தேர்வு குழுவினர் தேர்வு செய்து தேர்வை நடத்துகின்றனர். இவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பள்ளிக்கு ரேங்க் வழங்கப்படும். தேசிய அடைவு தேர்வு ஈரோடு
மாவட்டத்தில் நாளை நடக்கிறது. ஒவ்வொரு பள்ளியும், 30 மாணவ, மாணவிகளை தேர்வுக்கு
அனுப்ப வேண்டும்.ஈரோடு மாவட்டத்தில், 44 பள்ளிகளை சேர்ந்த மூன்றாம் வகுப்பு மாணவ, மாணவிகளும்; 38
பள்ளிகளை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவ, மாணவிகளும்; 49 பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம்
வகுப்பு மாணவர்களும் பங்கேற்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய
அடைவு தேர்வில் பங்கேற்கும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆயத்த கூட்டம், ஈரோடு
ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது.